என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எட்டயபுரத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம்: தி.மு.க.வினர் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேச்சு
- விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- இந்து மதத்திற்கு எதிரானவர்கள் பா.ஜ.க.வினர் தான். தி.மு.க.வினர் அல்ல என்று மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ பேசினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் அருகே நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
காமராஜ், நாவலர் நெடுஞ்செழியன், அண்ணா உள்ளிட்ட பெருந்தலைவர்கள் அங்கம் வகித்த சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்ட விவகாரம் மிகவும் வருத்த மளிக்கிறது.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இனியும் தொடர பிரதமரும், உள்துறை அமைச்சரும் அனுமதிக்க கூடாது.இந்து மதத்திற்கு எதிரானவர்கள் பா.ஜ.க.வினர் தான். தி.மு.க.வினர் அல்ல. அண்ணாமலை சிறைக்கு செல்வீர்கள் என்று என்னை கூறி வருகிறார். ஜெயிலுக்கு தான் செல்ல வேண்டும் என்றால் செல்ல தயார். அங்கு சென்று புத்தங்களை படித்து கொள்வேன்.
மார்கண்டேயனை சிறையில் அடைத்தால் பல்கலைக்கழகம் உருவாகும். அண்ணா மலையை சிறையில் அடைத்தால் பா.ஜனதா இல்லாமல் போகும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் வெள்ளைச்சாமி, ராதா கிருஷ்ணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், விளாத்திகுளம் மேற்கு செயலாளர்கள் அன்புராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, எட்டயபுரம் நகர செயலாளர் பாரதி கணேசன், இளைஞர் பேரவை துணை அமைப்பாளர் அருள் சுந்தர், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், இமானுவேல், மாவட்ட கவுன்சிலர் மிக்கல் நவமணி, மாரியம்மாள், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்