என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆருத்ரா பைனாஸ் ஊழலை மறைக்க தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
- சிதம்பரத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார்.
- தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவில்லை
கடலூர்:
சிதம்பரத்திற்கு வருகை தந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அடிப்படை ஆதாரம் இல்லாமல், அரசியலுக்காக ஊழல் குற்றச்சாட்டு கூறுகிறார். 10 ஆண்டுகளாக இருந்த அ.தி.மு.க. அமைச்சர்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை. பா.ஜ.க கட்சியினரே அண்ணாமலை ஊழல் பற்றி தெரிவிக்கின்றனர். அண்ணாமலை மீது தி.மு.க. கட்சி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளது. தி.மு.க. அமைப்பு செயலாளர் வழக்கு தொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். தமிழ்நாட்டில் அவர் அரசியல் நாகரீகத்தை பின்பற்றவில்லை. மிகப்பெரிய பதவியான ஐ.பி.எஸ் ஆகி ஊதியம் வாங்கியவர், அதை விட்டு எந்த நோக்கத்தில் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். எந்த கனவோடு அரசியல் கட்சியில் இணைந்தாரோ? அதை ஆருத்ரா கோல்டு பைனான்ஸில் அந்த கனவை நிறைவேற்றி விட்டார். தற்போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்த போது, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரவில்லை. தன்னை பதவியை விட்டு எடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளார் என்பதை காட்டுகிறது . இவ்வாறு அவர் பேசினார்.