என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காளிபாளையம் பகுதியில் இரண்டு ஆடுகளை இழுத்துச் சென்றது
- கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
- நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.
பரமத்தி வேலூர்:
பரமத்தி வேலூர் தாலுகா விற்கு உட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை,வெள்ளாளபாளையம்,ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள், கன்றுகள், நாய்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்டவைகளை கடந்த 15 நாட்களுக்கு மேலாக வேட்டையாடி வந்த சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை.
கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.
செஞ்சுடையாம்பா ளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை புலி வந்து சென்றதற்கான கால்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து இரவில் 30 கிலோமீட்டர் தூரம் வெளியே சென்று வேட்டையாடிவிட்டு மீண்டும் அதன் இருப்பி டத்திற்கு திரும்பி வருவதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மாவட்ட வனசரக அலுவலர் பிரவீன் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் சிறுத்தை புலி வந்து செல்லும் இடம் கண்டறியப்பட்ட பகுதியில் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி யும், இரண்டு கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியின்
நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தை புலியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை புலி எந்த கால்நடைகளையும் பிடிக்க வில்லை என்பதால் இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா? என வனத்துறையினர் தீவிர மாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்பு தூர் பகுதியில் உள்ள தோட்டப் பகுதியில் சிறுத்தை புலியின் கால் தடங்கள் பதிந்து இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் மற்றும் ராமாயி ஆகியோரது தோட்டப் பகுதிக்கு சென்று சிறுத்தை புலியின் கால் தடங்களை ஆய்வு செய்ததில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு
சிறுத்தை புலி வந்து சென்ற
தற்கான பழைய கால்த டங்கள் என்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை யினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் பரமத்தி
அருகே காளிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது
38).விவசாயி.அதே பகுதி யில் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஆடு களை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு
காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதி யில் பதிவான கால் தடங்கள்
சிறுத்தை புலி கால் தடமா?
என ஆய்வு செய்து வருகின்ற
னர்.இந்நிலையில் பரமத்தி வேலூர் பகுதியில் கால்ந டைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலியின் நட
மாட்டம் பற்றிய எந்த தடை
யும் இல்லை. இதனால் சிறுத்தை இடம் மாறி
இருக்கலாம் என்று
வனத்துறை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.
அதை உறுதி செய்யும் வகையில் நேற்று கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதியில் சிறுத்த புலி ஆட்டை வேட்டையாடி உள்ளது. பரமத்தி வேலூரில் முகாமில் இருந்த வனத்துறையை சேர்ந்த மலைவாழ் மக்கள் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலி பற்றிய எந்த தடையும் இல்லை. இருக்கூர் சுற்றுவட்டார பகுதியில் வனத்துறையினரின் தேடுதல் வேட்டை அதி கரித்திருப்பதால் பயந்து போன சிறுத்தை புலி இருக்கூர்பகுதியில் இருந்து காவிரி ஆற்றை கடந்து அக்கரையான கரூர் மாவட்டம் நொய்யல் வருகை அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளது. ஆனால் நீண்ட காலமாக தான் வசித்த கல்குவாரியை விட்டு போகாது. மீண்டும் இதே பகுதிக்கு திரும்ப வரலாம். அதனால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையுடன் தங்களது கால்நடைகளையும், குழந்தை
களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இருக்கூர் பகுதி மற்றும் கல்குவாரிகளில் புலிகளின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்