என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை-அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
    X

    கோவில்பட்டியில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி.

    கோவில்பட்டியில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை-அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் பயிற்சிப் பாசறை நடைபெற்றது.
    • தமிழன் பிரசன்னா, கோவி.லெனின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடைபெற்றது.

    கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி தி.மு.க. இளைஞரணியினருக்கான இப்பயிற்சிப் பாசறை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சி கோவில்பட்டி சவுபாக்யா திருமண மண்டபத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.

    மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலர் தமிழன் பிரசன்னா, சமூக சிந்தனையாளர் கோவி.லெனின் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். நகர்மன்றத் தலைவரும், தி.மு.க. நகரச் செயலருமான கா.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க. ஒன்றியச் செயலர்கள் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன், ராதாகிருஷ்ணன், அ.சுப்பிரமணியன், ஆ.சின்னப்பாண்டியன், தி.மு.க. நிர்வாகிகள் ராமர், ராஜகுரு, சண்முகராஜ், ரமேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×