என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
- அப்புவிளை பஞ்சாயத்து காமராஜர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் திராவிட மாடல் ஆட்சி உங்களுக்கு புரிகிறது. ஆனால் கவர்னருக்கு புரியவில்லை.
திசையன்விளை,மே.11-
திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை பஞ்சாயத்து காமராஜர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நடந்த கூட்டத்திற்கு ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன்
ராதாபுரம் யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், மாவட்ட முன்னாள் பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாபுரம் யூனியன் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிற்படு த்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு இணைந்து கலைஞருக்கு பிறகு இவர்தான் தகுதியான தலைவர் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை தேர்வு செய்துள்ளனர். திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் திராவிட மாடல் ஆட்சி உங்களுக்கு புரிகிறது. ஆனால் கவர்னருக்கு புரியவில்லை.
திராவிட மாடல் ஆட்சி
எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. கூட்டணி தர்ம த்தை மதிப்பவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனால் தான் தொழிலாளர் சட்டத்தை வாபஸ் பெற்றார். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு காலாவதியாகி விட்டது. இனி தி.மு.க. தான் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். அண்ணா மலைக்கும், கவர்னர் ரவிக்கும் அரசியல் தெரியாது. அவர்கள் முன்னாள் போலீஸ் அதிகாரிகள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தா மகேஷ்வரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் நாகமணி, மார்த்தாண்டம், மாவட்ட பிரதிநிதி சமுகை முரளி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை நகர இளைஞரணி அமைப்பாளர் நெல்சன் ராஜா, உவரி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் எஸ்.வி. அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் எம்.என். கண்ணன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்