search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
    X

    வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

    • நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
    • கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பொதுமக்கள் ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து மீளுவதற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யம் நகராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி தொழில்வரி குடிநீர் கட்டணம் கடை வாடகை மற்றும் தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நகராட்சியில் இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 40,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி தெரு விளக்கு பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்

    வரிகளை செலுத்தவில்லை என்றால் பாக்கி வைத்துள்ளவரின் பெயர்கள் பொது இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். எனவே உடனே வரி செலுத்தவும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும்.

    மேலும் ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை நகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும். நகராட்சி மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு நகராட்சி செலுத்த வேண்டிய சொத்து வரி குடிநீர் கட்டணம் தொழில்வரி கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×