என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
- பேரணியில் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி புறப்பட்டனர்.
- போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தியும் செல்லும் வழியில் பொது மக்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகித்தனர்.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் சர்வதேச போதை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தஞ்சை ரயிலடியில் இன்று காலை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி புறப்பட்டனர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப்பொருள் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் செல்லும் வழியில் பொது மக்களுக்கு துண்டுபி ரசுரம் விநியோகித்தனர். பேரணியானது பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்று தஞ்சை அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் வெங்கடேசன், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், டாக்டர்கள் சிங்காரவேலு, பாரதி, நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.