என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு தலைமையிலும், முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன் முன்னிலையிலும் நடந்தது.
போதை விழிப்புணர்வு கருத்தரங்கு
- குழந்தைகளை போதையின் பிடியிலிருந்து காப்பாற்ற பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றார்.
- பேசும்போது, பான்மசாலா, கஞ்சா, புகையிலை பயன்பாட்டால் 28 வகையான ரசாயனங்கள் உடலில் சேர்வதால் கேன்சர் ஏற்படும், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்படும்.
திருத்துறைப்பூண்டி:
தமிழக அரசு போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமலிருக்க, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆலோசனையின் படி திருத்துறைப்பூண்டியில் விழிப்புணர்வு பிரச்சார கருத்தரங்கம் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு தலைமையிலும், முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், முன்னிலையிலும் நடைப்பெற்றது.
நிகழச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழா பேருரையாற்றினார். அப்போது குழந்தைகளை போதையின் பிடியிலிருந்து காப்பாற்ற பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றார். பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் திட்ட விளக்கவுரையாற்றினார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் முதலியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி ஆகியோர் போதையின் தீமை குறித்து கருத்துரையாற்றினார்கள்.
அவர்கள் பேசும்போது, பான்மசாலா, கஞ்சா, புகையிலை பயன்பாட்டால் 28 வகையான ரசாயனங்கள் உடலில் சேர்வதால் கேன்சர் ஏற்படும், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்படும். போதையினால் மனநல பாதிப்பு, பாலியல் சீண்டல்கள் சமூக சீர்கேடுகள் ஏற்படும். எனவே நாம் ஒன்றிணைந்து போதை யில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றனர்.
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி, வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், , நகர்மன்ற துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், போதை தடுப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முன்னதாக நகராட்சி மேலாளர் சிற்றரசு வரவேற்றார், நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார், நிகழ்ச்சியில் அங்கன்வாடி, மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கலந்துக்கொண்டனர்.






