என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வள்ளியூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- தெற்கு கள்ளிகுளத்தில் அமைந்துள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- கள்ளிகுளம் ஜி.எம். மருத்துவமனை டாக்டர் எம்.செபஸ்டின் ஆனந்த் கொடி அசைத்து பேரணியினை தொடங்கி வைத்தார்.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளத்தில் அமைந்துள்ள நெல்லை தட்சண மாற நாடார் சங்க கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமையில், கள்ளிகுளம் ஜி.எம். மருத்துவமனை டாக்டர் எம்.செபஸ்டின் ஆனந்த் கொடி அசைத்து பேரணியினை தொடங்கி வைத்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி முழக்கம் எழுப்பியபடி பேரணி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையம் வரை நடைபெற்றது. இதில் என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர்.சி. மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஹரிகோவிந்தராஜ், ராஜேந்திரன் ரவிக்குமார், மதியரசி, கிரிஜா, சவரிராயம்மாள், கோகிலவாணி மற்றும் வக்கீல் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஹரி கிருஷ்ணன், பேராசிரியை ராஜ ராஜேஸ்வரி, இளம் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் பிருந்தா மற்றும் கல்லூரி ஐ.கியூ.ஓ.சி. ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் செய்திருந்தனர். வள்ளியூர் காவல் துறை சார்பில் பாதுபாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.