என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முகூர்த்தம், திருவிழாக்கள் இல்லாததால் மல்லிகை பூ கிலோ ரூ.1400-க்கு விற்பனை
- கடந்த வாரங்களில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது முகூர்த்த தினங்கள், திருவிழா இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.
- இன்று சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) ரூ.2400, ரூ.2600, ரூ.2800 என்ற விலையில் விற்கப்பட்டது.
அன்னதானப்பட்டி:
சேலம் பழைய பஸ் நிலையத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லூத்துப்பட்டி, ஓமலூர்,
காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கன்னங்கு றிச்சி, வாழப்பாடி,பேளூர், வீராணம், டி.பெருமா பாளையம் உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
பெங்களூரு, சென்னை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருமண முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிக ரிப்பது வழக்கம். கடந்த வாரங்களில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வந்ததால் பூக்களின் தேவை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது முகூர்த்த தினங்கள், திருவிழா இல்லாததால் பூக்களின் தேவை குறைந்துள்ளது.இன்று சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) வருமாறு:-
குண்டுமல்லிகை-ரூ.1400, முல்லை- ரூ. 800, ஜாதிமல்லிகை-ரூ.400, காக்கட்டான்ரூ-.320, கலர் காக்கட்டான்- ரூ.280, மலைக்காக்கட்டான்-ரூ.280, அரளி-ரூ. 280, வெள்ளை அரளி-ரூ.280,
மஞ்சள் அரளி- ரூ.280, செவ்வ ரளி-ரூ. 320, ஐ.செவ்வரளி-ரூ.320, நந்தியாவட்டம்- ரூ.280, சி.நந்திவட்டம்-ரூ.280, சம்மங்கி -ரூ.50, சாதா சம்மங்கி-ரூ.50 என்கிற விலையில் விற்கப்பட்டு வருகிறது. கடந்த வாரங்களில் முகூர்த்த தினங்கள், பண்டிகை நாட்கள் சீசன் காரணமாக குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.2400, ரூ.2600, ரூ.2800 என்ற விலையில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது சீசன் இல்லாததால் பூக்களின் விலை சரிபாதி யாக சரிந்துள்ளது. வரும்
நாட்களில் முகூர்த்த
தினங்கள் மற்றும் பண்டிகை நாட்கள் வரும் போது மீண்டும் பூக்கள் விற்பனை சூடுபிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்