என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்- மின் அமைப்பாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
- 2013 -ம் ஆண்டுக்கு முன்பு இருந்த விதிமுறைகள் படி நிபந்தனை இன்றி மின்இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
- கவனக்குறைவாக பணி செய்யும் பொழுது ஏற்படும் மின் விபத்துகள் குறித்து காணொளி மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் நெல்லை, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் டவுன் கோடீஸ்வரன் நகரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் பாக்கியம், தென்காசி மாவட்ட தலைவர் அய்யனார், டவுன் கிளை சங்க தலைவர் ஜான் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர்கள் அய்யப்பன், கர்ணன், பொருளாளர்கள் தியாகராஜன், துணைத் தலைவர்கள் கண்ணன், வேலு, சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மீட்டர் கட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்பு வழங்குதல், பழைய மின் இணைப்பின் பழுதடைந்த மீட்டரை மாற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கு காலதாமதம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் ஏழை- எளியவர்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்க மறுக்கப்படுகிறது.
எனவே 2013 -ம் ஆண்டுக்கு முன்பு இருந்த விதிமுறைகள் படி நிபந்தனை இன்றி மின்இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும். அரசின் மற்ற துறைகளை போல மின் உரிமம் வழங்கும் வாரியத்தில் ஆன்லைன் மூலம் மின் உரிமங்கள் புதுப்பித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை மண்டல மின் பாதுகாப்பு அதிகாரி, உதவி செயற்பொறியாளர் பேச்சிமுத்து , மின் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் புதிதாக வயரிங் செய்யும் போதும், பழைய வயரிங் மற்றும் மின் சாதனங்கள் மாற்றும் பொழுது பாதுகாப்புடன் பணி செய்வது பற்றியும், கவனக்குறைவாக பணி செய்யும் பொழுது ஏற்படும் மின் விபத்துகள் குறித்தும் காணொளி மூலம் விளக்கம் அளித்தார்கள்.
மேலும் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் பாதுகாப்பு சாதனம், அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்துவது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள் உதவி மின் பொறியாளர் பேட்டை பிரிவு சரவணன், பணியாளர்கள், மின் அமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்
இதற்கான ஏற்பாடுகளை நெல்லை டவுன் கிளை சங்க தலைவர் ஜான்ராஜா, செயலாளர் செண்பகம், பொருளாளர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் ஜாகீர், மாவட்ட ஆலோசகர் முத்து மாரியப்பன், நிர்வாக குழு தலைவர் கணேசன் மற்றும் டவுன் கிளைச் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்