என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வரத்து குறைவு எதிரொலி ஈரோடு வ. உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்தது
- கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.
- கடும் பனிப்பொழிவு தாக்கம், காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்படுகிறது
ஈரோடு,
ஈரோடு வ .உ. சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் கோலார், ஆந்திரா, தாளவாடி, அனந்தபூர் போன்ற பகுதிகளில் இருந்து 10 லோடு லாரிகளில் 10 டன் தக்காளிகள் வரத்தாகி வந்தன. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனையானது.
இந்நிலையில் கடும் பனிப்பொழிவு தாக்கம், காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இன்று வ. உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு கோலாரில் இருந்து ஒரு டன் தக்காளி மட்டுமே வரத்தாகி இருந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இன்று ஒரு கிலோ தக்காளி ரூபாய் 40க்கு விற்பனையானது. தொடர் முகூர்த்தம் இருப்பதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. எனினும் தேவைக்கு ஏற்ப தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது.
இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இதே நிலைமைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு மெல்ல மெல்ல விலை சரிய தொடங்கும் என தெரிவித்தனர்.