என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு கல்வி கடன் திட்டம்கடலூர் கலெக்டர் தகவல்
- கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கல்விக் கடன் திட்டம் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
- தகுதியுள்ள சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மத்திய அரசால் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் சமண மதத்தினர் ஆகிய பிரிவினர்களுக்கு மரபு வழி கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரசாத் என்ற மரபு உரிமை கடன் திட்டம் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டு, தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புற மாயின் ரூ. 98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம், வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.10 லட்சம் , திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
விண்ணப்பப் படிவங்களை கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கூடிய புகைப்படம், கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை , வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து மேற்குறிப்பிட்ட உரிய ஆவண நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கடலூர் அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு பண்டக சாலை வளாகம், வெள்ளிக் கடற்கரை சாலை, கடலூர் . என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பப்படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும். மேற்கண்ட பொரு ளாதார கடனுதவி திட்டத்தினை தகுதியுள்ள சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் தங்களது பொருளாதார நிலையினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்