search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி துறைமுகச்சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும் - பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை
    X

    தூத்துக்குடி துறைமுகச்சாலையில் மின்விளக்கு அமைக்க வேண்டும் - பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை

    • சாலை பணி தொடங்கபட்டபோது அங்கே இருந்த உயர் கோபுர மின் விளக்கு அகற்றப்பட்டது.
    • மின் விளக்குகள் இல்லாததால் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து குற்றவாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் துறைமுகம்-மதுரை பைபாஸ் -உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த சாலை பணி தொடங்கபட்டபோது அங்கே இருந்த உயர் கோபுர மின் விளக்கு அகற்றப்பட்டது. போக்குவரத்து வழி காட்டிகளும் கூகுள் செயலிலில் மாற்றப்பட்டது. இந்த வழியாக தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள், பஸ்கள், இருசக்கர வாகனங்களும் பயணம் செய்து வருகின்றன. மின் விளக்குகள் இல்லாததால் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து குற்றவாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து வழிப்பறிகளும் நடைபெற்று வருகிறது.வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி மற்றும் வாகன ஓட்டிகள் அரசியல் கட்சிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறைக்கும் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் அதே நிலை தொடர்வதாக புகார் கூறி உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும்,இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகின்றனர்.

    இந்த பக்தர்களின் பாதுகாப்பு கருதி துறைமுகச் சாலை பகுதியில் உடனடியாக தற்காலிக மின் விளக்குகள் அமைத்து பக்தர்களின் உடமைகளையும், பொதுமக்கள் வாகன ஓட்டிக ளின் உயிரையும் பாதுகாத்திட நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×