என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
- மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அந்த நகலை தீ வைத்து எரித்தனர்.
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீவைக்கப்பட்ட சட்ட நகல் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
தஞ்சாவூர்:
மின்சார சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாய சங்க நிர்வாகிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள புது ஆற்று பாலம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து கோசங்களை எழுப்பியவாறு அந்த நகலை தீ வைத்து எரித்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீவைக்கப்பட்ட சட்ட நகல் மீது தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.