search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் தற்காலிக வள நபர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    தஞ்சை மாவட்டத்தில் தற்காலிக வள நபர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • மாதத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை பணி இருக்கும்.
    • எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் தற்காலிக மாவட்ட வள நபர் (பண்ணை சாரா) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதற்கு இளங்கலை பட்டபடிப்பு - ரூரல் டெவலப்மண்ட், சமூக வேலை, பிஸ்னஸ் மேனேஜ்மண்ட் மற்றும் முதுகலை பட்டபடிப்பு- பிஸ்னஸ் மேனேஜ்மண்ட் கல்வி தகுதியாகும்.

    தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதன்மை பணி கிராமப்புறங்களில் இருப்பதால், தமிழில் நல்ல வாய்மொழி மற்றும் எழுத்து தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் அலுவலக நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கில அறிவு இருத்தல் அவசியம்

    கணினி இயக்குவதில் போதுமான அறிவு இருத்தல் அவசியம். 10 அல்லது அதற்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.3500 ஊதியமும், 6 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.2500, 2 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.2500 ஊதியமும் வழங்கப்படும்.

    மாதத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை பணி இருக்கும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 2-ந் தேதி ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி- இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், எண்.223, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தஞ்சாவூர்-613010.

    மேற்குறிப்பிட்டுள்ள தற்காலிக காலிபணியிடத்திற்கு மாவட்ட தேர்வுக்குழு வாயிலாக எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    தகுதிவாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியல் சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படும்.

    உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×