search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
    X

    பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

    • இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர்.
    • கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கும்பகோணம்:

    கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது. துணை மேயர் சு.ப.தமிழழகன், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் 48 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் அய்யப்பன் பேசுகையில், தனது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடைப்பை சரிசெய்ய வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் பத்மகுமரேசன் பேசுகை யில், தாராசுரம்பகுதி கும்பகோணம்மாநகரா ட்சியால் புறக்கணிக்க ப்படுகிறது என்றே நினைக்க தோன்றுகிறது. தாராசுரம் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் ஆதிலட்சுமி பேசுகையில், கூட்டத்தில் முக்கியமான பொருளை விவாதத்திற்கு கொண்டு வந்துள்ள போது அது குறித்து விவாதிக்காமல் கூட்டத்தை முடித்து தீர்மானங்களை நிறைவேற்றுவது கண்டிக்க த்தக்கது என்றார்.

    இதேபோல, கவுன்சி லர்கள் பலர் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். கூட்டத்தில் நகர் நல அலுவலர் பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×