என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தனியார் பேப்பர் ஸ்டோரில் ரூ.6 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது:கூகுள் பே மூலம் ஏமாற்றியது அம்பலம்
Byமாலை மலர்10 Sept 2023 1:56 PM IST
- செந்தில்நாதன் அதே பேப்பர் ஸ்டோரில் வேலை செய்து வந்த ராமச்சந்திரன் என்பவரின் செல்போனை திடீரென்று வாங்கி சோதனை செய்தார்.
- கடந்த 2021 முதல் தற்போது வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதை கண்டறிந்தார்.
கடலூர்:
கடலூர் செம்மண்டலத்தில் தனியார் பேப்பர் ஸ்டோர் உள்ளது. இதன் உரிமையாளர் செந்தில்நாதன் என்பவர், அதே பேப்பர் ஸ்டோரில் வேலை செய்து வந்த ராமச்சந்திரன் (வயது 41) என்பவரின் செல்போனை திடீரென்று வாங்கி சோதனை செய்தார். அதில் பேப்பர் ஸ்டோருக்கு திருமண அழைப்பிதழ் அச்சிட வரும் வாடிக்கையாளர்களிடம் தனது ஜிபே எண்ணை கொடுத்துள்ளார். அதன் மூலம் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளார்.
கடந்த 2021 முதல் தற்போது வரை பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதை கண்டறிந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் செந்தில்நாதன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பேரில் கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×