என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பினை பதிவு செய்து, கல்லூரி அரங்கத்தில் 50-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களின் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.
- முகாமில் எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்கள் 200 பேர் தன்னார்வு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியும், 'வி ஆர் யுவர் வாய்ஸ்' நிறுவனமும் இணைந்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.
கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஸ்காட் கல்வி குழும இயக்குநர் ஜான் கென்னடி வரவேற்றார்.
அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக கல்லூரி பொதுமேலாளர் கிருஷ்ண குமார் அப்துல்வகாப் எம்.எல்.ஏ.வுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
மேலும் ஸ்காட் நிர்மாண் சமூக சேவை நிறுவன மாற்றுத்திறனாளிகளின் படைப்புகளை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. பார்வையிட்டு பாராட்டினார். பின்னர் வாய்ஸ் நிறுவன இயக்குநர் காசிம் பாசித், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர் முகமது சாதிக், ஆகியோர் பேசினர்.
இதனைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பினை பதிவு செய்து, கல்லூரி அரங்கத்தில் 50-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களின் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.
அவர்களது தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. முகாமில் எப்.எக்ஸ். கல்லூரி மாணவர்கள் 200 பேர் தன்னார்வு பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில், பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வேலை வாய்ப்புத்துறை இயக்குநர் ஞானசரவணன், திறன் மேம்பாட்டுத்துறை இயக்கு நர் பாலாஜி, ஸ்காட் நிர்மாண் திட்ட இயக்குநர் சார்லஸ், பிளாரென்ஸ் காது கேளாதோர் பள்ளி முதல்வர் ஜான்சன், நாட்டு நலப்பணி இயக்குநர் சுமன் மற்றும் வாய்ஸ் நிறுவன நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை எப்.எக்ஸ். கல்லூரி வளாக மேலாளர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்