என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை முயற்சி
- 2 பேரும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர்.
- காதலியை சமாதானம் செய்வதற்காக தொடர்பு கொண்டார்
கோவை,
தேனியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் ஜெயா விஷ்ணு (வயது 22). இவர் கோவை மலுமிச்சம் பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
ஜெயா விஷ்ணு நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.
இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. அந்த மாணவி பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். சம்பவத்தன்று 2 பேரும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தூங்கி விட்டார்.
ஆனால் ஜெயா விஷ்ணு தனது காதலியை சமாதானம் செய்வதற்காக தொடர்பு கொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் மனவேதனை அடைந்த ஜெயா விஷ்ணு வாழ்க்கையில் விரக்தி அடைந்து விடுதியில் தூக்கு போட்டு தொங்கினார்.
இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






