search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கம்
    X

    2 நாட்கள் சிறப்பு ரெயில் இயக்கம்

    • 31-ந் தேதி (புதன்கிழமை) சிறப்பு ரெயில் (எண்: 06073), இயக்கப்பட உள்ளது.
    • அசாம் மாநிலம் ரங்கபா ராவுக்கு 2 நாள் கழித்து அதாவது வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்றடையும்.

    ஈரோடு,

    தென்னக ரெயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோட்டில் இருந்து அசாம் மாநிலம் ரங்கபரா வடக்குப் பகுதிக்கு வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) மற்றும் 31-ந் தேதி (புதன்கிழமை) சிறப்பு ரெயில் (எண்: 06073), இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்திலிருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக அசாம் மாநிலம் ரங்கபா ராவுக்கு 2 நாள் கழித்து அதாவது வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயிலில் 2 முதல் வகுப்பு ஏ.சி பெட்டிகள், ஒரு 2-ம் வகுப்பு ஏ.சி பெட்டி, 14 படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    இதைப்போல் மறு மார்க்கத்தில் அசாம் மாநிலம் ரங்கபரா வடக்கு பகுதியில் இருந்து ஈரோட்டிற்கு சிறப்பு ரெயில் (எண்: 06074) வருகிற 27ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் ஜூன் மாதம் 3ஆம் தேதி (சனிக்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் ஆனது ரங்கபராவில் இருந்து 27-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மத்தியானம் 1.15 மணி க்கு ஈரோடு ரெயில் நிலை யத்திற்கு வந்தடையும்.

    Next Story
    ×