என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் சிக்கினர் பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் சிக்கினர்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/08/1743046-arrest.jpg)
பெண்களிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் சிக்கினர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஈரோட்டில் வாகன சோதனையின் போது பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இரண்டு பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்த குமார் தலைமையில் கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்ப–ட்டது.
இந்நிலையில் வீரப்பன் சத்திரம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி–ருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த வாலிபர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன்பட்டி, குட்டை தெருவை சேர்ந்த மணிகண்டன் என்கிற மணி (27), நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 4 -வது வீதியை சேர்ந்த தவச்செல்வன் (21) என்பது ெதரிய வந்தது. மேலும் இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோடு சூரம்பட்டி, வீரப்பன் சத்திரம் பகுதியில் 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இவர்களிடமிருந்து இருந்து 7 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.