search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 9 பேர் கைது
    X

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 9 பேர் கைது

    • தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு கடையில் 129 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவு பேரில் மாவட்டம் முழுவதும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான் மசாலா பொருட்கள் விற்கப்படுகிறதா? என போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த அதிரடி சோதனை யில் தடை செய்யப்பட்ட புகையிலை பொரு ட்களையும் போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் விற்கப்படுகிறதா? என சோதனையிட்டனர்.

    அப்போது வெள்ளோடு அடுத்த ஞானிபாளையம், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் என மொத்தம் 129 பாக்கெட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் பங்களாபுதூர், சென்னி மலை, அம்மாபேட்டை, வீரப்பன்சத்திரம், தாலுகா, சூரம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ப னைக்கு வைத்திருந்ததாக மாவட்டம் முழுவதும் 9 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×