என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ரசாயன பட்டாசுகள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் ரசாயன பட்டாசுகள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்](https://media.maalaimalar.com/h-upload/2022/10/19/1779195-06.jpg)
X
ரசாயன பட்டாசுகள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
By
மாலை மலர்19 Oct 2022 3:10 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் மற்றும் நிரந்தர உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
- இதில் ரசாயன பட்டாசுகள் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஈரோடு, அக். 19-
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் மற்றும் நிரந்தர உரிமம் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டாசு உரிமம் பெறப்பட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். பட்டாசு உரிமம் பெறப்படாமலும், தடை செய்யப்பட்ட குடிமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பச்சை பட்டாசுகள் (பேரியம் கலந்த) ரசாயன பட்டாசுகள் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின்படி தீவிர நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
Next Story
×
X