search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழைத்தார் ஏலம் தொடங்கியது
    X

    வாழைத்தார் ஏலம் தொடங்கியது

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் தொடங்கியது.
    • முதல் வாரம் என்பதால் போதுமான விலை கிடைக்கவில்லை.

    சென்னிமலை:

    ஈரோடு வேளாண் விற்பனை குழு சார்பில் சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் தொடங்கியது.

    ஏலத்தை விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தொடங்கி வைத்தார். ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 105 வாழைத்தா ர்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் செவ்வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 32 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 35 ரூபாய்க்கும், தேன் வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 10 ரூபாய்க்கும்,

    அதிகபட்ச விலையாக 16 ரூபாய்க்கும், பச்சை வாழை ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 20 ரூபாய்க்கும்,

    ரஸ்தாளி வாழை குறைந்தபட்ச விலையாக 18 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 20 ரூபாய்க்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,075 கிலோ எடையுள்ள வாழைத்தார்கள் ரூ.10 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.

    முதன்முதலாக தொடங்க ப்பட்ட வாழைத்தார் ஏலத்தில் விலை குறைவாக கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,

    வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது குறித்து ஈரோடு வேளாண் விற்பனைக்குழு அலுவல ர்கள் கிராமங்கள் தோறும் அறிவிப்பு செய்திருந்த னர்.

    ஆனாலும் விவசாயிகள் குறைந்த அளவிலேயே வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்ததால் வியாபாரிகளும் குறைவாக வந்தனர்.

    முதல் வாரம் என்பதால் போதுமான விலை கிடைக்கவில்லை. இனிவரும் வாரங்களில் நல்ல விலை கிடைக்கும் என நம்புகிறோம் என்றனர்.

    Next Story
    ×