என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆசனூர் மலைப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தம்
- ஆசனூர் மலைப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
- இந்த கேமராக்கள் இணையதள இணைப்புகள் மூலம் ஆசனூர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை யுடன் இணைக்கப்பட்டு ள்ளன
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க மா வட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சத்தியமங்கலம் சப் டிவிஷனில் உள்ள ஆசனூர் காவல் நிலைய த்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுப்பதற்காக முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொரு த்தப்பட்டு அதற்கான கட்டு ப்பாட்டு அறை ஆசனூர் காவல் நிலை யத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆசனூர் காபி டே பேக்கரி முன்பு 4 கேமரா க்களும், காவல் நிலையம் முன்பு 2 கேம ராக்களும், அரேப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலை யம் முன்பு 2 கேமராக்களும், திம்பம் பஸ் நிலையம் பகுதி யில் 4 கேமராக்கள் என மொத்தம் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டு ள்ளது.
இந்த கேமராக்கள் இணையதள இணைப்புகள் மூலம் ஆசனூர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை யுடன் இணைக்கப்பட்டு ள்ளன. இதையடுத்து ஆச னூர் காவல் நிலை யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி. அய்மன் ஜமால் சி.சி.டி.வி. கேமரா இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 24 மணி நேரமும் சி.சி.டி.வி. கேமரா க்கள் மூலம் கண்காணி க்கப்பட்டு குற்றங்கள் உட னடியாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவி த்தார். அப்போது தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் சிறப்பு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.