என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குன்றி மலைப்பகுதியில் செல்போன் சேவை
- குன்றி மற்றும் மாக்கம்பாளையம் மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க கோரி ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.
- இந்நிலையில் குன்றி பகுதிக்கு வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி புதிய செல்போன் டவரை ரிப்பன் வெட்டி சேவையை தொடங்கி வைத்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அடர்ந்த வனப் பகுதியில் குன்றி மற்றும் கூத்தம்பாளையம் என ஊராட்சிகளில் சின்ன குன்றி, பெரியகுன்றி, கிளமன்ஸ் தொட்டி, மாகாளி தொட்டி, அணில் நத்தம் பண்ணையத்தூர், கோவிலூர், ஆனந்த நகர், கீழுர், கோம்பை தொட்டி, கோம்பையூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு ெதாலை தொடர்பு வசதி இல்லாததால் செல்போன் சேவை இன்றி மலை கிராம மக்கள் பரிதவித்து வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு குன்றி பகுதியில் தொலைத்தொடர்பு டவர் அமைக்கப்பட்ட நிலையில் சிறிது நாட்களே செயல்பட்ட அந்த டவர் மீண்டும் செயல்பாடு இன்றி இயக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதைத்தொடர்ந்து குன்றி மற்றும் மாக்கம்பாளையம் மலை கிராமங்களை சேர்ந்த மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க கோரி ஈரோடு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு தனியார் செல்போன் நிறுவனம் மூலம் குன்றி பகுதியில் புதிதாக செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது.
இந்த செல்போன் கோபுரம் கடந்த ஜூலை 2-ந் தேதி முதல் சோதனை அடிப்படையில் இயங்க தொடங்கியது.
இந்நிலையில் குன்றி பகுதிக்கு வந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி புதிய செல்போன் டவரை ரிப்பன் வெட்டி சேவையை தொடங்கி வைத்தார்.
இதனால் மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளதால் அப்போது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் ரூ. 86.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சத்தியமங்கலம் வட்டம் கடம்பூர் பகுதியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குத்தியாலத்தூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்