search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
    X

    பங்குனி உத்திர தேரோட்டத்தையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் தேர் தயார் செய்யும் பணி நடந்த போது எடுத்த படம்.

    சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

    • பங்குனி உத்திர தேரோட்டம் கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
    • 3 -ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய திருதலங்களில் சென்னிமலை மலை முருகன் கோவில் திகழ்ந்து வருகிறது.

    இங்கு முருகனுக்கு தைப் பூசதேர், பங்குனி உத்திர தேர் என 2 திருத்தேர் உள்ளது. ஆண்டு தோறும் தைப்பூச தேரோட்டமும், பங்குனி தேரோட்டமும் சிறப்பாக நடந்து வருகிறது.

    இதையொட்டி இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. 3 -ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 4-ந் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

    இதை தொடர்ந்து 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ரதாரோகணக்காட்சியும், தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் தேவஸ்தான மண்டபத்தில் அக்னி நட்சத்திர அன்னதான விழாக்குழு சார்பாக அன்னதானம் நடக்கிறது.

    மேலும் அன்று மாலை 5 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. 7 – ந் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனம் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை உதவி ஆணையாளரும் தக்காருமான அன்னக்கொடி,செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் ரவிக்குமார், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், செய்து வருகின்றனர்.

    Next Story
    ×