search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணி
    X

    கோபிசெட்டிபாளையம் கீரிபள்ளம் ஓடையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அருகில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உள்பட பலர் உள்ளனர்.

    ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணி

    • கீரிபள்ளம் ஓடையில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணி.
    • தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய த்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறை வேற்றும் வகையில் நீர்வளத்துறையின் சார்பில் பொதுநிதியில் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட,

    வெள்ளாள பாளையம் ஊராட்சி, பாரியூர் கீரிபள்ளம் ஓடையில் உயர்மட்டபாலம் அமைக்கும் பணியினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில்,

    அமைச்சர் முத்துசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பாலம் அமைக்கும் பணியினை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் இந்த உயர்மட்ட பாலம் சுமார் 16 மீட்டர் நீளத்திற்கு அமையவுள்ளது. ஓடையின் இருபுறமும் பக்க வாட்டு சுவர் அமைக்கப்படவுள்ளது.

    முன்னதாக கோபிசெட்டி பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட, பொலவகாளிபாளையம் கால்நடை மருத்துவமனை அருகில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை அமைச்சர் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, கோபி செட்டி பாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ், செயற்பொ றியாளர் (பவானிசாகர் அணைக்கோ ட்டம்) அருள் அழகன்,

    உதவிசெய ற்பொறியாளர் சதீஷ்குமார், கோபிசெட்டி பாளையம் தாசில்தார் (பொறுப்பு) சிவசங்கர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×