search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானியில் வருவாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    பவானியில் வருவாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

    • பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பவானி:

    திருச்சி மாவட்டம் துறை யூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனுக்கு நரசிங்கபுரம் பகுதியில் மணல் கடத்தப்படு வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சம்பவ இடம் சென்றார். அப்போது டிராக்டர் மூலம் சிலர் கிராவல் மண் அனுமதி இன்றி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    இது குறித்து அவர்களிடம் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் கேட்டு தடுத்து நிறுத்தினார். அப்போது 4 பேர் அவரை தகாத வார்த்தையால் பேசி அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து துறையூர் போலீசில் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில் வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து பவானி தாசில்தார் அலு வலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பவானி வட்டக் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். செய லாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை பறிக்கப்பட வேண்டும். அவர் மீதும் மறறவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கபட வேண்டும். வருவாய் துறை அலுவலர்க ளுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பி னர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், தாசில்தார் அலுவலக பணி யாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உதவி யாளர் சங்கத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×