என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
- சென்னிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை முருக பெருமானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.
- திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் இன்று காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்க ளில் இன்று ஏராளமான பக்த ர்கள் சாமி தரிசனம் செய்த னர்.
சென்னிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்தி கையை யொட்டி இன்று அதிகாலை முருக பெரு மானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலை சுப்பி ரமணியசாமி கோவிலில் இன்று அதிகாலை சுப்பிர மணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று காலை பெண்கள், ஆண்கள் என ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு பால் குடம் எடுத்து வந்தனர்.
இதை தொடர்ந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி சுப்பிரமணிசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து இன்று மாலை தங்க மயில் வாகனத்தில் தங்கரத புறப்பாடு நடக்கிறது.
ஈரோடு அடுத்த திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் இன்று காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஈரோடு, திண்டல், பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் ஈரோடு பார்க் ரோடு முருகன், காசிபாளையம் மலை மலேசியா பாலமுருகன், கருங்கல்பாளையம் சுப்பிர மணியசாமி, பவானி பழனி ஆண்டவர், கோபி செட்டிபாளையம் பவள மலை முருகன் கோவில் மற்றும் பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்