என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
- ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஈரோடு:
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். குறிப்பாக பெண்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இதில், ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.
ஈரோடு கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவிலில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இதேபோல், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் இன்று ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானி கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதேபோல் கோபியில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று அம்மனை வழிபட்டனர். இதேபோல் சாரதா மாரியம்மன் கோவில் அந்தியூரில் உள்ள பத்தரகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்