search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளம் பாதித்த பகுதிகளை  எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
    X

    வெள்ளம் பாதித்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்

    • பவானியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.

    பவானி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விட்டது.

    இதனால் அம்மா பேட்டை, பவானி மற்றும் ஈரோடு உள்பட பல்வேறு இடங்களில் காவிரி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பவானி, அம்மா பேட்டை பகுதி களில் காவிரி கரை யோரம் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இதே போல் பவானி காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானி புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட்டு பகுதிகள் உள்பட பல இடங்களில் காவிரி கரையோரம் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பவானியில் வெள்ளம் பாதித்த புதிய பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி உள்பட பல பகுதிகளை முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கந்தன்பட்டறை பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளபொது மக்களை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து அவர் வெள்ளம் பாதித்த பகுதிகளை சேர்ந்த பொது மக்களுக்கு துணி, அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் உள்பட பொருட்களை வழங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×