search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவுடன் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
    X

    பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுவுடன் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் செலவினப்பார்வையாளர் கவுதம் குமார் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    • தேர்தல் தொடர்பாக வந்துள்ள 218 புகார்களின் மேல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் கவுதம் குமார் இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டரங்கில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படைக் குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்களுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    சட்டமன்றத் தொகுதியில் வாகனங்கள் அதிக அளவு செல்லக்கூடிய முக்கிய சாலை சந்திப்புகள் அதிக தேர்தல் செலவினங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ள பகுதிகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்க ளுடன் கலந்தா லோசித்து அங்கு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும், வாகன சோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

    வாகன சோதனை யின் போது பணம், மதுபானங்கள், ஆயுதங்கள், வாக்காளர்க ளைக வரும் வகையிலான பொருட்கள் ஆகியவை கொண்டு செல்லபடுகிறதா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறதா?

    தனிநபர் ஒருவர் ரூ.50 ஆயிரம் வரை எவ்வித ஆவணங்களும் இன்றி பணத்தை கொண்டு செல்லலாம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் ரொக்கமாக கொண்டு செல்லும் பட்சத்தில் உரியஆவணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ரூ.10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மதிப்புடைய பொருட்கள், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள், ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படின் அவற்றை பறிமுதல் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும்,

    ரூ10 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்படும் நேர்வுகளில் அலுவலர்கள் தாங்கள் வழக்கு பதிவு செய்யாமல் அதனை வருமானத் துறையினருக்குத் தெரிவித்து அவர்கள் மூலமாக வழக்கு பதிவு செய்யப்படுகிறதா? என்பது குறித்தும்,

    வங்கிகளில் பணம் நிரப்புவதற்காக வங்கியி லிருந்து பணத்தினை வங்கிகளால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் உரிய அனுமதியுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம்.

    அவ்வாறு எடுத்து செல்லும் போது அந்த வாகனத்தில் உள்ள அனைவரும் அடையாள அட்டையினை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

    அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளில் உள்ள கொடிகள், சின்னங்கள் மற்றும் கட்சிகளின் பெயர்களை மறைத்துள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    அனைத்து வாகனங்களிலும் ஏதாவது கட்சியின் பெயர் சின்னம் மற்றும் கொடி ஆகியவை இருப்பின் அவை அகற்றப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டும் ஏதேனும் ஒரு கொடி, பேனர், பதாகை வைத்துக் கொள்ள அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெறாமல் கூட்டம், ஊர்வலம் ஆகியவை நடத்தப்படாமல் இருப்பதை கண்காணித்தல் பிரச்சார கூட்டங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் முன் அனுமதி பெறாமல் வாகனங்கள் பங்கேற்பதை கண்காணித்தல்,

    பிரச்சாரத்தின் போது 10வாகனங்களுக்கு மேல் தொடர்ச்சியாக செல்லும் சமயங்களில் 100 மீட்டர் இடைவெளி விட்டு செல்வதை உறுதி செய்தல்.

    எந்த ஒரு மத வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளாமல் இருத்தலை கண்காணித்தல். அரசியல் கட்சிகளால் விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட அச்சக உரிமையாளர்கள் மூலம் கலெக்டருக்கு சமர்ப்பிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

    மேலும் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள், அன்பளிப்புகள், மதுவகைகள் விநியோகம் செய்வதாக புகார்கள் வரப்பெறும் பட்சத்தில் பறக்கும் படையினரால் மேற்படி சம்பவ இடத்திற்கு உடனடி யாக செல்ல இயலாத நிலை ஏற்படும் பட்சத்தில்,

    அருகில் இருக்கும் நிலையான கண்காணிப்பு குழுவின ருக்கோ அல்லது சம்பவ இடத்திற்கு அருகில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்திற்கோ தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வுமேற்கொண்டார்.

    தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் அதில் பெறப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான புகார்கள் தொடர்பாக பதியப்பட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தேர்தல் தொடர்பாக வந்துள்ள 218 புகார்களின் மேல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் ஈரோடு மாநகராட்சி 2-ம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றழிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு அறையினில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான விளம்பர செலவினங்கள் குறித்து தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், வானொலி மூலமாகவும் கண்காணி க்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வுகளின் போது தேர்தல் நடத்தும் அலுவலர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) குருநாதன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×