search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் நடப்பு பருவத்திற்கான இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது-வேளாண் அதிகாரிகள் தகவல்
    X

    ஈரோட்டில் நடப்பு பருவத்திற்கான இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது-வேளாண் அதிகாரிகள் தகவல்

    • ஈரோட்டில் நடப்பு பருவத்திற்கான இடுபொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
    • எண்ணெய் வித்துக்கள் 20.79 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி-அர க்கன்கோட்டை பாசனத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. காலிங்க ராயன் பாசனத்திற்கு கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு நெல் நடவுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. அடுத்த மாதம் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது தவிர மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் பாசனத்திற்கு அட்டவணைப்படி அடுத்த மாதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

    இதையடுத்து இடு பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:- விவசாயிகளுக்கு நடப்பாண்டிற்கு தேவையான இடு பொருட்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி நெல் விதைகள் 147.48 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 18. 35 மெட்ரிக் டன், பயறுவகைகள் 2 மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள் 20.79 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இதேபோல ரசாயண உரங்களான யூரியா 4121 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 3790, பொட்டாஷ் 3436, காம்ப்ளக்ஸ் 11729 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×