என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை-பேச்சுப்போட்டிகள்
- தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
- ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
பேரறிஞர் அண்ணா அவர்களால் தாய்த்தமிழ் நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நாளான ஜூலை 18-ம் நாள் இனிய தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
இதன்படி வருகின்ற 18-ந் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் வரும் 6-ந் தேதி (புதன்கிழமை) கலைமகள் கல்வி நிலையத்தில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டிக்கள் தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்தியாகம், மொழிவாரிமாநிலம் உருவாக்கத்தில் தந்தைபெரியார், மொழிவாரிமாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்புகளில் நடைெபறுகிறது.
இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.
போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்