என் மலர்
உள்ளூர் செய்திகள்
தனியார் விடுதியில் விவசாயி தற்கொலை
- சம்பவத்தன்று நல்லசாமி தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்ததால் விடுதி ஊழியர் சென்று பார்த்தார்.
- போலீசார் நேரில் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நல்லசாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
கொடுமுடி:
திருப்பூர் மாவட்டம் முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி. விவசாயி. இவர் உடல் நல பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி கொடுமுடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நல்லசாமி தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்ததால் விடுதி ஊழியர் சென்று பார்த்தார். அப்போது கதவு உள்புறமாக தாழ்போட்டு இருந்தது தெரிய வந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் நேரில் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நல்லசாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் விடுதியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடுமுடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.