search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தபட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
    X

    குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தபட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

    • நிறுவனங்களில் ஆய்வு செய்து 20 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.
    • குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், 1098 மற்றும் 155214 என்ற இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.

    சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ், மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ேஹாம், மருத்துவ பரிசோதனை கூடங்கள் என 103 நிறுவனங்களில் ஆய்வு செய்து 20 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.

    பொட்டல பொருட்கள் விதிப்படி நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், காலணிகள், சிகரெட், லைட்டர்கள் விற்பனை செய்யும் கடைகள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என 66 நிறுவன ங்களில் ஆய்வு செய்ததில் 2 நிறுவன ங்களில் முரண்பாடு அறியப்பட்டது.

    குறைந்த பட்ச ஊதிய சட்டத்தில் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தொடர்பாக 25 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் குறைந்த பட்ச ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்காத 1 நிறுவனம் மீது நடவடிக்கைக்கு ஈரோடு தொழிலாளர் இணை ஆணையருக்கு படிவம் தாக்கல் செய்துள்ளனர்.

    குழந்தை தொழிலாளர்கள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா என்பது குறித்து 415 நிறுவனங்களில் நடந்த கூட்டாய்வில் குறைபாடு கண்டறியப்படவில்லை. அந்நிறுவனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஆய்வு குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    எடையளவு, மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்கள் அதிக பட்ச சில்லரை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால் உரிய அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தக்கூடாது. அவ்வாறு பணி அமர்த்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது கைது செய்யப்பட்டு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்த்து விதிக்க நேரிடும்.

    குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், 1098 மற்றும் 155214 என்ற இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×