search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரில் ரேஷன் அரிசி கடத்திய கர்நாடக வாலிபர் கைது
    X

    காரில் ரேஷன் அரிசி கடத்திய கர்நாடக வாலிபர் கைது

    • தாளவாடியில் இருந்து கர்நாடகா நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • காரை நிறுத்தி சோதனை செய்த போது ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

    இதனை தடுக்க ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் கூடுதல் காவல்துறை இயக்குனர் அருண் உத்தரவின் பெயரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே மல்லன்குழி என்ற பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மற்றும் தாளவாடி போலீசார் ஒன்றிணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது தாளவாடியில் இருந்து கர்நாடகா நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து காரில் இருந்த நபரிடம் இது குறித்து விசாரித்த போது அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் கோட்டப் பள்ளி, உப்பார்வீதியை சேர்ந்த உமேஷா (23) என்பதும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்தி சென்றதை ஒப்புக் கொண்டார்.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கார் மற்றும் 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்க ப்பட்டார்.

    Next Story
    ×