என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொல்லம்பாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் விரைவில் போக்குவரத்து தொடக்கம்
- ரெயில்வே நுழைவு பாலத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
- இதில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் வழியில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது.
இந்த பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதாலும், சாலை சிதிலமடைந்ததாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ரூ. 50 லட்சம் மதிப்பில் இச்சாலையை சீரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கியது.
இதனால் ஈரோடு நாடார்மேடு பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாஸ்திரிநகர், சென்னிமலை ரோடு வழியாக ஈரோடு ரெயில் நிலையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து ரெயில்வே நுழைவு பாலத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து சில பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அந்த வழியாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
வழக்கம்போல ஈரோடு கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டும் ஒருவழி பாதையாக அனுமதிக்கப்படுகின்றன. விரைவில் இதில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:
ரெயில்வே நுழைவு பாலத்தில் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நிறைவடை ந்துள்ளன. மழைநீர் வடிகாலும் அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது சில நாள்களாக பலத்த மழை பெய்தபோதும் அங்கு தண்ணீர் தேங்கவில்லை. இனி முன்பு போல அங்கு தண்ணீர் தேங்காது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.
தற்போது சாலை நடுவில் கொஞ்சம் கசிவுநீர் வெளியேறி வருகிறது. இதை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளன. மேலும் ரெயில்வே நுழைவுப் பாலத்தில் இருந்து கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் சாலை யில் கான்கிரீட் தளங்களுக்கு இடையே உள்ள சிறிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ள்ளாவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
அதையும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. இந்த பணிகள் ஒரு வார காலத்துக்குள் முடிவடையும் என எதிர்பா ர்க்கிறோம். அதன்பின், வழக்கம்போல ரெயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்