என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2023/03/11/1848062-05.webp)
மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சம்பவத்தன்று தாமோதரனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
- இதனால் மனமுடைந்து எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார்
ஈரோடு:
மொடக்குறிச்சி அடுத்துள்ள பூமாண்டம் வலசு கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (40). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தாமோதரன் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் குடிப்பழ க்கத்திற்கு அடிமையான தாமோதரன் தினமும் குடித்து வந்ததால் வயிறு, தொண்டை ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று குண மடைந்தார்.
இதனையடுத்து சம்பவத்தன்று திடீரென்று தாமோதரனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்து எலி பேஸ்ட் (விஷம்) தின்று மயங்கி கிடந்தவரை மீட்ட குடும்பத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாமோதரன் இறந்தார்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.