search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள் மட்டுமே விநியோகிக்க வேண்டும்
    X

    விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகள் மட்டுமே விநியோகிக்க வேண்டும்

    • அங்கக சான்று உதவி இயக்குநர் விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார்.
    • தரமான சான்று பெற்ற விதைகளை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் விதைப்பு செய்வதற்கு தேவைப்படும் தரமான சான்று பெற்ற விதைகளை வழங்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அவ்விதைப்பண்ணை கள் அனைத்தும் வளர்ச்சி ப்பருவம், பூ பருவம் மற்றும் முதிர்ச்சி பருவங்களில் விதைச்சான்று அலுவலர்களால் வய லாய்வு மேற்கொ ள்ளப்பட்டு அவ்விதை களின் தரம் உறுதிபடு த்தப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் மோகன சுந்தரம் பவானி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஓடத்துறை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து வம்பன் 10 சான்று நிலை விதைப்பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வில் விதைப்பண்ணையின் விதை ஆதாரம், பிற ரக விதைகள் கலப்பு, களை மற்றும் பூச்சிநோய் மேலாண்மை ஆகியவை ஆய்வு செய்ய ப்பட்டு உற்பத்தியாளர் மற்றும் விவசாயிக்கு தரமான சான்று பெற்ற விதைகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நு ட்பங்களை வழங்கினார்.

    இதேபோல பவானி அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தினை பார்வை யிட்டு விதை இருப்பு விபரம், வயல்மட்ட விதைக்குவியல் அளவு, விதை சுத்திப்பணி, சுத்தி செய்யப்பட்ட விதைக்குவி யல்கள், சிப்பங்களின் எடை, ஈரப்பதம் சரிபார்த்தல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

    அனைத்து விதைச்சான்று நடைமுறை களையும் பின்பற்றி விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை மட்டுமே விநியோகம் செய்ய வேண்டுமென அதிகாரி களுக்கு உதவி இயக்குநர் மோகனசுந்தரம் உத்தர விட்டார்.

    ஆய்வின் போது, விதைச்சான்று அலுவலர் தமிழரசு, உதவி விதை அலுவலர் குருமூர்த்தி, வேளாண்மை அலுவலர் முருகேசன், கண்கா ணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×