search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலைமறியல்

    • சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டம் செய்தனர்.
    • இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி–திருப்பூர் மரப்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதிக்கு கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனாலும் இதுவரை குடிநீர் வரவில்லை.

    இதையடுத்து இன்று காலை இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் காலிகுடங்களுடன் ஒன்று திரண்டு வெள்ளிதிருப்பூர்-அந்தியூர் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டம் செய்தனர்.

    இதன் காரணமாக ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் வெள்ளி திருப்பூர் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் செய்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வரவேண்டும். எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தை கைவிடுங்கள். குடிநீர் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினர்.

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    Next Story
    ×