என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கடும் குளிரால் பொதுமக்கள் அவதி கடும் குளிரால் பொதுமக்கள் அவதி](https://media.maalaimalar.com/h-upload/2022/11/20/1794846-02.jpg)
X
கடும் குளிரால் பொதுமக்கள் அவதி
By
மாலை மலர்20 Nov 2022 2:38 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி மாவட்டம் முழுவதும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
- மலைப்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளிக்கிறது.
மழை நின்றதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவுடன் கடும் குளிரும் நிலவியது. இந்த நிலையில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி மாவட்டம் முழுவதும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
இதனால் காலை நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்படுகிறது. மலைப்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
Next Story
×
X