என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
- கணக்கெடுக்கும் பணி வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது.
- வனத்துறையினர் நேர்கோட்டுப் பாதையில் சென்று கண க்கெடுப்பு நடத்த உள்ளனர்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானி சாகர், தாளவாடி, கடம்பூர், ஆசனூர், விளாமுண்டி உள்ளிட்ட 10 வனச்சர கங்களில் மழைக்காலத்திற்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
இதையொட்டி வன ப்பகுதிகளில் புலிகள், சிறுத்தைகள் மற்றும் பெரிய தாவர உண்ணிகளான யானை, காட்டெருமை ஆகியவைகளின் கணக்கெடுக்கும் பணி இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கி நடந்து வருகிறது.
இன்று காலை தொடங்கிய வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி வருகிற 17-ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று பகுதிவாரியாக வனத்துறை ஊழியர்கள் பிரிந்து சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக நாளை (செவ்வாய்க்கிழமை) வனத்துறையினர் நேர்கோட்டுப் பாதையில் சென்று கண க்கெடுப்பு நடத்த உள்ளனர்.மேலும் 4 நாட்களும் பகுதிவாரியாகவும், நேர்கோட்டுப் பாதையிலும், சுழற்சி முறையில் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஒரு குழுவிற்கு வன க்காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட 4 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து மொத்தம் சுமார் 300-க்கும் மேற்பட்டோர், உணவு, தண்ணீர், ஜி.பி.எஸ், ரேஞ்ச் பைண்டர், காம்பஸ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களோடு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று, இந்த புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த 6 நாட்கள் புலிகள் கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் 4 நாட்களுக்கு பிறகு சத்தியமங்கலம் புலிகள்காப்பகத்துக்கு உட்பட்ட 10 வனச்சரகங்களிலும் தானியங்கி கேமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
இதை தொடர்ந்து 3 மாதங்கள் அந்த தானியங்கி கேமிராக்கள் மூலம் சிறுத்தை மற்றும் புலிகளின் நடமாட்டம், பாலினம் மற்றும் குட்டிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அந்த வீடியோ பதிவுகள் மற்றும் நேரடி கணக்கெடுப்பின் இறுதி எண்ணிக்கை உயர் அதி காரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வனப்பகுதியில் 1.5 கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு தானியங்கி கேமிரா என மொத்தம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மட்டும் 700 கேமிராக்களை பொருத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
சென்ற ஆண்டு வரை நடைபெற்ற கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் ஆரோக்கியமான வன ச்சூழலில் வாழ்ந்து வருவது. வனத்துறையினரின் புள்ளி விவரங்களின்படி தெரியவருகிறது.
தற்பொழுது நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பின் இறுதி வடிவம் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகே, மேலும் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது குறித்து தெரிய வரும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக உயிரியலாளர் சக்திவேல் தெரித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்