search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பணி நிறைவு நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையா வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர்கள் ஹரிதாஸ், ஆறுமுகம், பிரசன்னா, சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    1.1.2022 முதல் 30.6.2022 முடிய வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான சந்தா தொகை ரூ. 497 ஆக உயர்த்தப்பட்டதை கைவிட வேண்டும்.

    தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியின் படி 70 வயதினை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 அனைவருக்கும் வழங்கிட வேண்டும். ெரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயண கட்டண சலுகையை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.

    பணி நிறைவு நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையா வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×