என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை அமோகம்
- ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
- மொத்தம் வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கே தினசரி கடைகள் மற்றும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது.
இதற்காக ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா மகாராஷ்டிரா, கேரளா போன்ற வெளி மாநிலத்தி லிருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலைக்கு துணி மணிகளை கொள்முதல் செய்து செல்கின்றனர். இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வியாபாரிகளும் துணிகளை வாங்கி செல்கின்றனர்.
இதனால் வார சந்தை நடைபெறும் நாட்களில் ஈரோடு ஜவுளி சந்தை களை கட்டியிருக்கும். மற்ற இடங்களை விட இங்கு துணிகளின் விலைகள் குறைவாக விற்கப்படு வதால் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கிய முதல் ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அதன்படி இந்த வாரம் கூடிய ஜவுளி சந்தையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வியா பாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று மொத்தம் வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்றது.
ஆனால் அதே நேரம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. இன்று சில்லரை வியாபாரம் 40 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோடை காலம் தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாகவே காட்டன் தொடர்பான துணிகள் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
குறிப்பாக காட்டன் சேலைகள், காட்டன் சுடிதார்கள், குழந்தைகளுக்கான காட்டன் கவுன்கள், காட்டன் வேட்டி, துண்டு வியாபாரம் விறு விறுப்பாக நடந்து வருகிறது.
கடந்த 2 வாரமாக மொத்த வியாபாரத்தை விட சில்லரை வியாபாரம் நன்றாக உள்ளது என்றனர்.