என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை](https://media.maalaimalar.com/h-upload/2023/05/05/1876664-11.webp)
X
ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
By
மாலை மலர்5 May 2023 3:30 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தைக்கு கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
- விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.
இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர் மற்றும் புளியம்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.
இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுச்சந்தையில் ஜெர்சி மாடுகள், கலப்பின மாடுகள் மற்றும் ஆடு, கோழி, கன்றுகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
இதில் கால்நடைகளின் விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
X