search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
    X

    சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

    • கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி பேரூராட்சி பகுதியில் க.ஒத்தக்கடையில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதேபோல் கொடுமுடி அருகே கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம் முகாம் கொடுமுடி சமூகநல பாதுகாப்புத் திட்ட தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    கிளாம்பாடி பிர்க்காவுக்கு உட்பட்ட ஊஞ்சலூர், வெள்ளோட்டம் பரப்பு, கிளாம் பாடி, பாசூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். இம்முகாம்களில் குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, தெருவிளக்கு போன்ற மனுக்கள் பெறப்பட்டன.

    இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்முகாம்களில் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி நில வருவாய் அலுவலர் சக்திவேல், கிளாம்பாடி நில வருவாய் அலுவலர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், சுதா, நித்யகல்யாணி, ஊஞ்சலூர் ரமேஷ், பிரபாகர், மருத்துவ துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பவானி வட்டத்திற்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகம், கவுந்தபாடி நில வருவாய் அலுவலகம், குறிச்சியில் உள்ள தனியார் மண்டபம் என 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஜாதிசான்றிதழ், வருமானம், குடியிருப்பு சான்றிதழ், குடிநீர் வசதி,சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் பவானி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் 171மனுக்களும், கவுந்தபாடியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்ராஜ் தலைமையில் 208 மனுக்களும்,குறிச்சியில் மண்டல துணை தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் 112 மனுக்களும் என மொத்தம் 491மனுக்கள் பெறப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோரிக்கை மனுக்களை வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக தாசில்தார் முத்துகிருஷ்ணன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    Next Story
    ×