என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்](https://media.maalaimalar.com/h-upload/2023/04/29/1873863-08.webp)
ஈரோட்டில் மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாம்பழ குேடான்களில் ஆய்வு செய்தனர்.
மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஈரோடு மாநகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
- உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் மாம்பழ குடோன், மொத்த விற்பனை கடைகள், இதர பழக்குடோன்களில் செயற்கை முறையில் ரசாயனம் மற்றும் கார்பைடு கற்கள் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்ற ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எட்டிக்கன், செல்வன் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்தனர்.
பழ வியாபாரிகள் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்பதால் அப்பழங்களை சாப்பிடும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே அவ்வாறு பழுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் உணவு பொருட்கள் தொடர்பான குறைபாடுகளை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என செய்திக்குறிப்பில் கேட்டு கொண்டனர்.